உனக்கு உளி நீயே..!


உயரப் பறந்தாலும் உலகம் தூற்றும்…🥺நீ ஒடுங்கி நடந்தாலும்உலகம் தூற்றும்…😯உன்னை நீ செதுக்கு..🤔உனக்கு உளியாய் நீயே இரு…🧐உன் வாழ்வைஉனக்காய் வாழ்ந்திடு்…😎

அம்மாவின் கண்ணீர்.🥀🥺


நான் பெத்த பிள்ளஎன்ன பிடிக்கலனு சொல்லுது..🥀 மொத்தமாக அத்துபோயி என் உசுருநிக்குது..🥀 கத்தி ஒன்னு வெச்சுவெட்டித் தான் காட்டனுமா?என் நெஞ்சு கூட்டுக்குள்ளநீ இருக்கும் இடம் எங்கன்னு..🥀 உன் முகம் பார்க்கும்முன்னரேஎன் அடி வயித்த அறுத்தேனே,அழகு மணி உனை பார்க்க..🥀 ஆருயிரும் பறி தவிக்கஅன்பு மக உனைஈந்தேனே.. 🥀 என் இச்சைகளைதுரத்தி விட்டுநா மீந்த சோறுதின்னேனே..🥀 உனக்கு பால் சோறுபிடிக்குமுண்ணு,நா பழைய சோறுஉண்டனே..🥀 இப்போ ஒரு வேளைசோத்துக்கு,நா ஒவ்வொரு வாசப்படிஏறுகிறேனே..🥀 நா ஊட்டுன பால் உனக்கு,ஒரு வேளையும்செமிக்கலயா..🥀 சொத்து…

கண்ணீர் கவிதைகள் – 12


உயிர் உறைந்து போகிறேன்..நீ சொன்ன வார்த்தைகேட்டு..கணம் கணமும் இறந்து போகிறேன்..காதல் எனும் கவலையில்வீற்று..🥀🥺 தமிழ் இளவரசி..

கண்ணீர் கவிதைகள்-11


உயிரை நோகடிக்கும் வார்த்தைகள்தான் காதலைகாயப்படுத்தும் என்பதில்லை..நீ பார்க்கும் ஒரு ஏளன அலட்சிய பார்வை அதைவிட என் மனதை சுக்கு நூறாக உடைக்கிறதே..! தமிழ் இளவரசி…

மகிழினியின் மனது-4


அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு வெள்ளைத் துணி மூடியபடி ஒரு பெண்ணின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டது.. கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசித்துக் கொண்டு இருந்த மகிழினி யின் பெற்றோர் அந்த சடலம் கொண்டுவரப்பட்டது பார்த்தவுடன் சுத்தமாக ஒரு நிமிடம் மூச்சு நிறுத்திவிட்டனர்.. உயிர் பிரிந்த உடல் போல் உறைந்து போய் நின்றார்கள்.. அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது அந்த சடலம்.. இந்த சடலத்தை வண்டியில் தள்ளிக் கொண்டு வந்த அந்த நபர்,

என் உயிர் தோழமையே…👭


நண்பா..என் பாரத்தை உன் தோளில் இறக்கி வைத்தேன்..இருந்தாலும் நீ எனை பாரம் என்று நினைக்கவில்லை… தோழி…என் வலிகளை உன்னிடம் கூறினேன்..என் காயங்களுக்கு மருந்தாக மாறினாய்.. நண்பா..என்னை சோக முகத்தில் நீ பார்த்தால்,சிரிக்க வைக்கும் கோமாளியாய் தோன்றி நின்றாய்… தோழா..உயிருக்கு மேலாக நினைக்கும் என் காதல் என்னை விட்டு சென்றாலும்,அதுகூட சருகு தானடா நான் இருக்கிறேன் உனக்காக.. என்றாய்… நண்பியே..உன் கனவுகள் கனவாக மட்டுமே இருக்கும் என்று என் சுற்றங்கள் சொல்லும்போது,அதை நிஜமாக மாற்ற நித்தம் நீ போராடினாய்……

மகிழினியின் மனது-3


கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை இழந்து கொண்டிருந்த மகிழினியை தூக்கிக்கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.. அது ஒரு பெரிய அரசு மருத்துவமனை.. மகிழினியின் தந்தை கூலி வேலை பார்ப்பதால் அவரிடம் பெரிய அளவில் எந்த ஒரு சொத்தும் பணபலமும் கிடையாது.. அதனால் மகிழினி அரசு மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டாள்.. “ஐயோ கடவுளே என்னோட பொண்ணு எப்படியாவது காப்பாத்து.. ” என்று மனதுக்குள் மகிழினியின் அம்மா கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்…

வெற்றியின் வார்த்தைகள் -7


துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி

எனதவன் – 25


நீ என் மடி சாயும் நேரம் என் மனம் எங்கும் வீசும் காதல் வாசம்… உன் காதல் ஒன்றே போதும், என் காலம் முடிந்தாலும்… தமிழ் இளவரசி..

அம்மா உனக்காக-1


உன்னை ஈன்ற வலியை விட பெரிது உன் வலியின் கண்ணீரை காண்பது.. இப்படிக்கு உன் அம்மா… தமிழ் இளவரசி..

வெற்றியின் வார்த்தைகள் -6


தடைகளைத் தாண்டும் தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால், உடைந்த பூமியையும் ஒன்றாக்க முடியும்… தமிழ் இளவரசி

மகிழினியின் மனது-2


அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மகிழினி யின் மீது படாரென்று மோதியது.. “அம்மா ஆ ஆ ஆ…..” என்று அலறிய மகிழினிதூக்கி எறியப்பட்டாள்.. அந்த ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளை சுற்றி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட அவளை தூக்க வரவில்லை. அவளால் நகர முடியவில்லை. அவள் கால்கள் இரண்டும் பலத்த காயமுற்று இருந்தது.. அவளின் புத்தகப்பை வெகு தூரத்தில் பறந்து போய் விழுந்தது.. உடனிருந்த மகிழினி…

எனதவன்-24


நான் இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழ்வேன் என்று தெரியாது.. ஆனால் நீ என்னை பிரியும் தருணம் வருமாயின் அன்றே பிரியும் உன் மடி சாய்ந்து… ❤️தமிழ் இளவரசி..

மகிழினியின் மனது-1


மணி காலைல அஞ்சரை ஆச்சு.. இன்னுமா தூக்கம்.. என்ன புள்ளையோ.. எந்திரிச்சு வெட்டு வெடுக்குனு வேலைய பாக்கலாம்னு இல்ல.. பொட்ட புள்ளைக்கு என்ன ஒரு தூக்கம்.. எப்போ தான் இதெல்லாம் உருப்பட போகுதோ.. என்று இடை விடாத பேச்சுக்களோடு தொடர்ந்து கொண்டே இருந்தார் மகிழினி யின் அப்பா.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் படாரென எழுந்து உட்கார்ந்தாள். தலையில் அடித்துக்கொண்டு “எல்லா என்னோட தலை எழுத்து” என்று புலம்பிகொண்டே எழுந்தாள்.

உருவம் இல்லாது போன என் காதல்


உதிர்ந்த இலையின் உருவம் நான் ஆனேன்..மலர்ந்த மலரான என்னை கொய்தாய் நீதானே..இன்று உன் நினைவின் ஓரத்தில் கூட இல்லாமல் நான் போனேன்..நீ மறந்த என்னை நான் வெறுக்கவில்லை..மேலும் அதிகம் நேசிக்கிறேன்இழந்த என்னை மீண்டும் பெற… என் கவியில் உன்னை நான் பதித்தேன்..என் மனதில் உன் மேல் காதல் தான் வளர்த்தேன்…ஒரு நொடி ஏளன பார்வையில் என்னை நீ தூக்கி எறிந்தாய்..என் உயிர் நாடி உறைந்தேன்..ஆனால் என் உயிர் உடைந்து போகவில்லை..ஏனென்றால் என் காதல் உண்மை.. நீ என்னை…

வீரத் தமிழ் தேசம்


Originally posted on Tamizhin Nadhi!:
தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சீறி வரும் தேகத்திலே ஏறி வருது வீரக்காள. பாய்ந்து வரும் வேகத்திலே அனல் பறக்கும் மனசுக்குள்ள. எட்டி நின்னு பார்க்கயிலே ஈரக்குளை இறந்து போகும். பறந்து வந்து அடக்கயிலே தமிழன் தேகமெல்லாம் தீப்பிடிக்கும். வீரம் விளைந்த பூமியிங்க. மானம் விதைச்ச சாமியிங்க. பூமி மாதா பாதம் தொட்டு விளையாடும்…